மேற்கு வங்காளம்: நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கி கொண்டனர். மேற்கு வங்காளத்தில் அசன்சோல் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கிராமவாசிகள் சிலர் நிலக்கரியை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். அந்த பகுதி எம்.எல்.ஏ.வான அஜய் பொட்டார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றார். இந்த சூழலில், சுரங்க விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரின் உடலும் மீட்கப்பட்டு இருந்தது.

நிலக்கரியை எடுப்பதற்காக கிராமவாசிகள் சென்று அவர்களே பலியாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தில் இது அடிக்கடி நடக்கிறது என்றும் கூறினார். உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் இதுபோன்று கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கி கொண்டனர். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here