கூலிம்:
சுங்கை கோப் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட 34 வயது பெண் வணிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்த பெண் காவலரைத் தரக்குறைவாகப் பேசியதுடன், தட்டிக்கேட்ட ஆண் காவலரின் முகத்தில் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
காவல் நிலையக் கதவை உதைத்துச் சேதப்படுத்திய அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. எவ்வித முன் குற்றப் பின்னணியும் இல்லாத அவர் மீது, தற்போது அரசு ஊழியரைத் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





















