சீனப் புத்தாண்டு: 2.5 மணி நேரத்தில் 9,000 பயணிகள் வருகை! குஷியில் மலேசியச் சுற்றுலாத் துறை

கோலாலம்பூர்:

மலேசியாவின் சுற்றுலாத் துறை தற்போது ஒரு மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது.

சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று (பிப்ரவரி 17), காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரையிலான வெறும் இரண்டரை மணி நேர இடைவெளியில், 8,840 பயணிகள் 32 விமானங்கள் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) வருகை தந்துள்ளனர்.

இந்த அதிரடி வருகை காரணமாக கோலாலம்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹோட்டல் அறைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளன.

இந்த அதிகரிப்பு, ‘விசிட் மலேசியா 2026’ பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஹரி ராயா பண்டிகைக்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here