ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 22:
மறைந்த இராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரனின் இளைய சகோதரி, கே. மைத்ராஷினிக்குத் தேவையான கல்வி உதவிகளை கல்வி அமைச்சகம் (MOE) ஒருங்கிணைக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
மைத்ராஷினி இங்குள்ள எஸ்.கே. கான்வென்ட் கிரீன்லேனில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.
குறித்த மாணவியின் நலன் மற்றும் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, தேவையான அனைத்து வகையான உதவிகளையும் கல்வி ஆதரவையும் ஒருங்கிணைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு (PPD) உத்தரவிட்டுள்ளதாக ஃபட்லினா கூறினார்.





















