ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்

தெக்ரான்,அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது தொடங்கிய போர் இன்று 22-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஈரான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், எண்னை சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குகிறது.

இந்தநிலையில் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நட்டான்ஸ் (Natanz) மீது அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் இதுவரை எவ்வித அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள ஈரான் அரசு, இது சர்வதேச விதிகளை மீறிய செயல் எனவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலின் கிண்டர் கார்டன் உள்ளிட்ட 12 இடங்களில் கிளஸ்டர் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here