தாய், சகோதரி, தோழி, மனைவி என எல்லாவுமாக இருக்கும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

கோலாலம்பூர்:

ன்று அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் தாயாய், சகோதரியாய், மனைவியாய், சிறந்த தோழியாய் என பல வழிகளில் பல துறைகளில் சிறந்து விளங்கும் அனைத்து சகோதரிகளுக்கும் மக்கள் ஓசை தனது இனிய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனைத்துலக மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரித்தது. எனினும் பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் 1848 ஆம் ஆண்டு அடிமை எதிர்ப்பு போராட்டங்களின்போது, அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டன. அமெரிக்கப் பெண்களான எலிசபெத் கேடி ஸ்டேண்டன், லூக்ரீசிய மோர் ஆகியோர் நூற்றுக்கணக்கான மக்களோடு கூடி, பெண்களின் உரிமைக்காக மாநாடு நடத்தினர்.

1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவில் முதல் முதலாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் மார்ச் 8 ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினமாக கொண்டாடப்படத் தொடங்கியது.

பழங்காலத்தில் பெண்களை வீட்டுப்படி தாண்டவிடாத சமூகமாக இருந்தது. ஆனால் இன்று விண்ணில் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு, ஆண்களுக்கு சரி நிகராக மனோ தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் நினைத்ததை சாதிக்கிற வல்லமை கொண்டவர்களாகவும் பெண்களது வளர்ச்சியும் சாதனையும் வானளாவி நிக்கிறது.

வாழ்நாள் முழுவதும் எம்மைக் கொண்டாடும் பெண்களை நாம் இன்று கொண்டாடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here