கோலாலம்பூர்:
மலேசியாவின் ஆறு மாநிலங்களில் இன்று பிற்பகல் 3.00 மணி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) மதியம் 1.09 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையின்படி, பின்வரும் மாநிலங்களும் அதன் முக்கியப் பகுதிகளும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
பாதிக்கப்படும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளாக, . தீபகற்பத்தின் கிழக்குக் கரை (East Coast), திரெங்கானு: கோலா திராங்கானு மற்றும் மாராங் (Marang), பகாங்: குவாந்தான், பெரா (Bera), பெக்கான் மற்றும் ரொம்பின் (Rompin) ஆகிய பகுதிகளும் தீபகற்பத்தின் மேற்குக்கரை மற்றும் தெற்குப் பகுதி:மலாக்கா: மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும், நெகிரி செம்பிலான்: சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா பிலா, ரெம்பாவ், ஜெம்போல் மற்றும் தம்பின், ஜோகூர்: தாங்கார்க் (Tangkak), சிகாமாட், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகியனவும் அடங்கும்.
அதேநேரம் கிழக்கு மலேசியா (சபா) சிபித்தாங், தெனோம், பியூஃபோர்ட், கெனிங்காவ் மற்றும் தம்புனான்,
மேற்குக் கரை (West Coast): பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோட்டா கினபாலு, துவாரான் மற்றும் கோத்தா பெலுட், மற்றும் கூடாட் (Kudat): கோத்தா மாருடு ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என சொல்லப்படுகிறது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் போது பொதுமக்கள் பொதுச் சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போதும், வெளியில் நடமாடும் போதும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















