போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பயணத்தைத் திட்டமிடுங்கள் – ‘PLUS’ நிறுவனம் அறிவுறுத்தல்!

கோலாலம்பூர்:

ஜ்ஜுப்பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறை முடிந்து கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்பும் வாகன ஓட்டிகள், கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் மலேசியா பெர்ஹாட் (PLUS) நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, ஜூன் 4, 5, 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நெடுஞ்சாலைகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2.2 மில்லியன் வாகனங்கள் வரை பயணிக்கும் என எதிர்பார்ப்பதாக பிளஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போக்குவரத்தை சீரமைக்க 33 முக்கிய இடங்களில் ‘ஸ்மார்ட் லேன்’ (Smart Lane) பாதைகள் செயல்படுத்தப்பட்டுள்ள வேளையில், R&R பகுதிகளில உணவகங்கள், தொழுகை அறைகள், கழிப்பறைகள் போன்ற பொது வசதிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அது உறுதியளித்துள்ளது.

டோல் சாவடிகளில் தாமதங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்களின் Touch ‘n Go கார்டு அல்லது RFID கணக்குகளில் போதுமான தொகையைச் சேமித்து வைக்குமாறும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1800-88-0000 என்ற எண்ணில் பிளஸ்லைனைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் நினைவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here