நெகிரி செம்பிலான் தேர்தல்: அரசமைப்பைக் கவிழ்க்க முயன்ற ‘துரோகிகளுக்கு’ எதிராகக் களம் காண்போம் — அந்தோணி லோக் அதிரடி முழக்கம்!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக விழாவில் ஆவேசமாக உரையாற்றிய ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பொதுச்செயலாளர் அந்தோணி லோக், மாநில அரசமைப்பையும் மந்திரி பெசார் அமினுடின் ஹருனையும் கவிழ்க்க முயன்ற அரசியல் எதிரிகளைப் பகிரங்கமாக ‘துரோகிகள்’ என்று சாடியுள்ளார்.

கடந்த கால அரசியல் மற்றும் பாரம்பரியச் சடங்குச் சிக்கல்களின் போது மந்திரி பெசாருக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொண்டு, பின்னால் இருந்து குத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றவர்கள் மந்திரி பெசார் பதவிக்கு வர நினைத்தால், அவர்களை எதிர்த்து இறுதிவரை வலிமையோடு களம் காண்போம் என எச்சரித்தார்.

தற்போதைய மந்திரி பெசார் அமினுடின் ஹருனின் நல்லாட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் முழு ஆதரவும் தொடர்ந்து நீடிக்கும் என்பதை உறுதியளித்தார்.

பாரம்பரிய வழக்கங்களுக்கு மரியாதை: உணர்வுப்பூர்வமான நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பாரம்பரிய அரச வழக்கங்கள் மற்றும் சடங்குகள் (Adat) குறித்துத் தேர்தல் பிரச்சாரங்களின் போது பக்காத்தான் கூட்டணி கட்சியினர் எவ்விதக் கேலிப் பேச்சுகளிலும் ஈடுபடக் கூடாது எனத் தீர்க்கமான கட்டளையிட்டார்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி எப்போதுமே கூட்டரசு அரசியலமைப்பையும் மாநில அரசமைப்பையும் போற்றிப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here