(ரெ.மாலினி)
மலாக்கா:
கோத்தா லக்சமணா பகுதியில் இன்று மாலை ஒரு கடை வீட்டு கட்டிடம் இடிந்து விழுந்து, அதன் இடிபாடுகள் கீழே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதுவரை கிடைத்துள்ள ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















