நெகிரி செம்பிலான் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 18.22% வாக்குகள் பதிவு!

சிரம்பான்:

ன்று நடைபெற்று வரும் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், காலை 10:00 மணி நிலவரப்படி 18.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, தகுதிபெற்ற 8,59,760 சாதாரண வாக்காளர்களில் 1,56,678 பேர் காலை 10 மணி வரை தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

காலை 10 மணி நிலவரப்படி. 18.22 விழுக்காடு வாக்குகள் (1,56,678 வாக்காளர்கள்) பதிவாகியுள்ளது. இங்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 859,760 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் விரைந்து வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here