மருத்துவச் சேவையை வலுப்படுத்த தேசிய டிஜிட்டல் சுகாதார நடைமுறை

பாடாங் பெசார்,

தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்ஸில் நேற்று பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள பாடாங் பெசார் சுகாதார கிளினிக்கிற்கு வருகை தந்தார். தேசிய டிஜிட்டல் சுகாதார நடைமுறை உள்ளிட்ட செயல்திட்டங்களின் நிலவரங்களை அவர் நேரில் பார்வையிட்டார்.

எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தின் வாயிலாக தொடர்புத்துறை அமைச்சுகளை கடந்து ஒத்துழைப்பை சுகாதார அமைச்சுடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த டிஜிட்டல் தொழில்நுட்ப நடைமுறைகள் வாயிலாக சேவைகள் வழங்கப்படுவதை இதன்மூலம் வலுப்படுத்த முடியும்.

இந்த நடைமுறைகள் குறித்தும் செயல்திட்டங்கள் குறித்தும் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்ஸிலுக்கு விளக்கமளிக்கப்பட்டது. டிஜிட்டல் நடைமுறைகள் குறித்து அவருக்கு செயல்பாட்டு ரீதியாக எடுத்துரைக்கப்பட்டது. தேசிய சுகாதாரச் சூழலை ஆதரிக்கும் டிஜிட்டல் நடைமுறை அவருக்கு விளக்கப்பட்டது. மின்னியல், மருத்துவ ஆவணங்கள் பயன்பாடும் அதில் அடங்கும். இதன்மூலம் நிறைவான சுகாதாரச் சேவை சீரான முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த முடிகிறது என்று அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகளில் சேவை நடைமுறைகளை வலுப்படுத்த பெர்சாடா எனப்படும் தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு மருத்துவ ஆவணம் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம்.

கடந்த ஆண்டு பெர்சாடா செயல்திட்டத்திற்கு ஒரு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் கூடுதலாக 350 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எம்சிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்தது.

தேசிய சுகாதார டிஜிட்டல் சமச்சீர் நடைமுறையின் கீழ் சுகாதார மருத்துவச் சேவை வலுப்படுத்தப்பட்டு சேவைத் திறனும் அதிகரிக்க முடியும் என்று எம்சிஎம்சி அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

இந்தப் பெர்சாடா செயல்திட்டம் மருத்துவச் சேவைத் துறைக்கும் மக்களுக்கான சுகாதார சேவைக்கும் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் என்று அந்த அறிக்கை விவரித்தது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் அதே சமயம் அவற்றை வலுப்படுத்தும் சமச்சீரான நடைமுறைகளையும் அது மேலும் சீராக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஒரு நபருக்கு ஒரு சுகாதார ஆவணம் எனும் இலக்கை அடைவதை இந்த நடைமுறை துரிதமாகச் சீராக்க முடியும் என்றும் எம்சிஎம்சி அறிக்கை மேலும் விவரித்திருக்கிறது.

வெவ்வேறு இடங்கள் அல்லது மருத்துவ மையங்களிலிருந்து சேவையைப் பெறும்போது நோயாளியின் சுகாதாரப் பதிவு சிகிச்சைக்கான சமச்சீரான தன்மையை ஆதரிக்கக்கூடியதாகவும் இது அமையும் என்று எம்சிஎம்சி மேலும் விவரித்திருக்கிறது.

இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்கான நடைமுறையும் அனுபவமும் இன்னும் சீரானதாக அமைகிறது. அது மேலும் முறையானதாகவும் இருக்கும். அதுமட்டுமன்றி இந்தச் செயல்திட்டம் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்க உதவவும் முடியும் என்று எம்சிஎம்சி அறிக்கை விவரித்திருக்கிறது.

இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு நோயாளிகளில் பெரும்பகுதியினர் ஒரு மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சையைப் பெற்று விடுவார்கள். இதன்மூலம் அவர்கள் காத்திருக்கும் நேரமும் குறைகிறது என்று எம்சிஎம்சி தெரிவித்தது.

பெர்சாடா திட்டத்திற்கு மத்திய அரசு பெரிய அளவு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் அதனுடைய சமச்சீரான தன்மை மேலும் வலுவடைகிறது.

நாட்டின் பொது சுகாதாரத் தொடர்புகளை ஆதரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளையும் டிஜிட்டல் நடைமுறைகளின் சமச்சீரான திட்டத்தையும் பெசர்டா வலுப்படுத்தும் என்பது உறுதி என எம்சிஎம்சி தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here