சென்னை:
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பிரபலங்களைப்பற்றி விமர்சனங்களை கூறுவதில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். இவர் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து தமிழகத்தில் பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியிருந்தார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.





















