புத்ராஜெயா:
மலேசிய சுங்கத்துறை தலைமை இயக்குனராக டத்தோ அனிஸ் ரிசானா முகமட் ஜைனுடின் @ முகமட் ஜைனுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து, இந்தப்பதவிக்கு பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றிலும் இடம்பிடித்தார்.
அவரது இந்த நியமனம் இன்று (செப்டம்பர் 25) முதல் அமலுக்கு வருவதாக, அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளார்.
























