வெளிநாட்டு சாலை பயனர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 20 நாட்கள் நடவடிக்கையில் 14,527 நோட்டீஸ்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 20 நாட்கள் சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக 14,000 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மலேசிய போக்குவரத்துத் துறையினர் (JPJ) நோட்டீஸ்களை வெளியிட்டனர்.

வெளிநாட்டு சாலைப் பயனர்களுக்கு மொத்தம் 14,527 அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. அதில் முக்கிய குற்றங்களான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் (6,268 வழக்குகள்); காப்பீடு இல்லை (2,667); காலாவதியான சாலை வரியுடன் பயணம் செய்தது (2,657) ; மற்றும் தொழில்நுட்ப மாற்ற குற்றங்கள் (1,948) ஆகியவை அடங்கும் என்று JPJ மூத்த அமலாக்க இயக்குனர், டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

“போக்குவரத்து மீறுபவர்களுடன், குறிப்பாக செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் வெளிநாட்டினருடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம், ஏனெனில் அவர்கள் மற்றவர்களுக்கு (சாலையைப் பயனர்களுக்கு) ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார் அவர்.

“நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளை அவர்கள் அறிந்திருக்காததால் அவை அனைவருக்கும் அபாயகரமானவை” என்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) ஜாலான் பங்சாரில் நடந்த சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் சந்தித்தபோது, “கூறினார்.

அந்தக் கூட்டு நடவடிக்கையில், காவல்துறை, போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை மற்றும் குடிவரவுத் துறையைச் சேர்ந்த மொத்தம் 100 பணியாளர்கள் ஈடுபட்டதாக லோக்மேன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here