கோம்பாக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

கோம்பாக்:

கோம்பாக் வெளியேறும் பகுதிக்கு அருகில் உள்ள ஜாலான் லிங்காரான் தெங்கா 2 (MRR2) கால்வாய் அருகில் நேற்று முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாலை 4.31 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் நூர் அரிபின் முகமட் நசீர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் 63 வயதுடைய உள்ளூர் பிரஜை என்றும், அவருக்கு மனநலப் பிரச்னை இருப்பதாகவும் உயிரிழந்த முதியவரின் மகன் உறுதிப்படுத்தினார்.

“இறந்தவரின் உடலில் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகளில் வேறு காயங்களோ அல்லது குற்றவியல் சம்பவங்கள் நடந்ததாகவோ சாத்தியங்கள் இல்லை. அதனால் இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here