அமெரிக்காவில் அம்பேத்கருக்கு 19 அடி உயரச் சிலை

மெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வருகிற 14-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான ‘பாபா சாகிப்’ டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் ‘தம்மா சக்ரா பரிவர்தன் தினம்’ என கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் அனைத்துலக மையத்தில் ‘சமத்துவத்திற்கான சிலை’ என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது.

ஒற்றுமைக்கான சிலை எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here