24 மணி நேர உணவகங்களுக்கு தடை விதிப்பது அவசியமற்றது- கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்:

நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஒன்றாக 24 மணி நேரமும் இயங்கும் உணவகங்களை தடை செய்யும் முயற்சி அவசியமற்றது எநறு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், 24 மணி நேரமும் செயற்படும் உணவகங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் (CAP) கோரிக்கையை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அமாட் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் லிம் லிப் எங் சொன்னார்.

24 மணி நேரமும் செயல்படும் உணவகங்களைத் தடைசெய்வது உணவுத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தி, உணவுகளின் சொர்க்கமாக இருக்கும் மலேசியாவின் நற்பெயரைக் குறைக்கும் என்றார்.

“இந்த உணவகங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், உணவு விற்பனை மற்றும் சுற்றுலா என்பவற்றின் மூலமும் வருவாய் ஈட்டுவதால் மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here