13 வயது மாற்றுத்திறனாளி மகளை குழந்தை பெறும்வரை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

கோலாலம்பூர்:

னது 13 வயது மாற்றுத்திறனாளி மகளை குழந்தை பெற்றுக்கொள்ளும்வரை பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது காமுகனான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மகள் தனது அடி வயிற்றில் வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, அந்த சிறுமியை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் சந்தேகநபரின் இழிவான இந்தச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன என்று, டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர் மைசுரா அப்துல் காதிர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 376 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் அச்சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதில் இருந்து பலமுறை அவரது தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது எங்கள் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் சந்தேக நபர் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பலமுறை கைது செய்யப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here