(பி.ஆர்.ராஜன்)
Digital நடைமுறை வழி வரிசெலுத்துவோர் அவர்களின் வரி, நிதி அறிக்கை சமர்ப்பிப்பதை நிர்வகிப்பதில் உருமாற்றம் கொண்டு வருவதில் மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் (IRBM) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இந்த உருமாற்றத்தினமைய அம்சமாக E-invoice நடைமுறையை அமலாக்கம் செய்தது விளங்குகிறது. நிதி அறிக்கையை சமர்ப்பிப்பதில் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் ஆக்கபூர்வமான நடைமுறையை அமல்படுத்தி வரி செலுத்தும் நடவடிக்கைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.
இப்பயணத்தின் ஒர் அங்கமாக முழு அளவில் Digital மய சமர்ப்பிப்பு கட்டமைப்புக்கு மாறியது திகழ்கிறது. இந்த மாற்றத்திற்கு தயாராவதற்கு திட்டமிடுவதில் எதிர்கொள்ளப்பட்ட அனுபங்களும் சவால்களும் நிறுவனங்களுக்கு பெரும் துணையாக இருந்திருக்கின்றன.
இ-இன்வாய்ஸ் அமலாக்கத்தில் முக்கிய மைல்கல்
E-invoice நடைமுறையானது மலேசியாவில் வரி, நிதி அறிக்கை சமர்ப்பிப்பில் ஒரு புதிய உருமாற்றத்தைக் கொண்டு வரும் என்பது நிதர்சனம். இன்று இந்த நடைமுறை சில குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருக்கிறது.
தொழில்துறை உரிமையாளர்கள், பங்குதாரர்கள். ஏஜென்சிகள் ஆகிய தரப்பினருடன் மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் நடத்திய பல்வேறு சந்திப்புகள் வழி இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. வரி செலுத்துவோர் எதிர்கொண்ட சவால்களையும் பிரச்சினைகளையும் களைவதில் இந்த சந்திப்புகள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.
இந்த சந்திப்புகள் வழி E-invoice நடைமுறை பற்றிய பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவற்றுக்கு ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதன்வழி Digitall முறை பயணத்தில் மிக சுமுகமாக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது.
இ-இன்வாய்ஸ் அமலாக்கத் திட்டமானது 2024 ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி முன்னோடி நிறுவனங்களுக்கு MYInvois sandbox environment வழங்கப்பட்டதன் வழி தொடங்கியது. மற்ற நிறுவனங்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் 2024 ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி இது வழங்கப்பட்டது.
2024 மே 15 தொடங்கி Application Programming Interface (API) வழி MYInvois நடைமுறை கிடைக்கப்பெற்றது. இதனை பயன்படுத்தி முன்னோடி நிறுவனங்கள் இ-இன்வாய்ஸை வெளியிடத் தொடங்கின. அதேசமயத்தில் MYInvois Portal 2024 ஜூலை 31ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 2024 அக்டோபர் 18ஆம் தேதி வரை 62,000,000 இ-இன்வாய்ஸ்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டன.
இது E-invoice அமலாக்கத்தின் மிகப் பெரிய வெற்றியை பிரதிபலிப்பதாக உள்ளது. அதன் அமலாக்கம் எதிர்பார்த்ததை விட ஆக்கப்பூர்வமான பலனைத் தந்தது.
நோர்த்போர்ட் டிஜிட்டல் மய பயணமும் வரி . நிதி அறிக்கை சமர்ப்பிப்பும் நோர்த் போர்ட் மலேசியா பெர்ஹாட் 2024 ஆகஸ்டு 1ஆம் தேதி E-invoice நடைமுறை பயணத்தை தொடங்கியது. இதில் அதன் பலன்களும் சவால்களும் கோடிட்டுக் காட்டப்பட்டன.
நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த நிறுவனம் தொடர்ந்து சீராக செயல்பட்டு வருகின்றது. இதில் அதி முக்கியமாக சுற்றுச்சூழல். சமூகம், ஆளுமை (ESG) ஆகியவற்றை செயல்படுத்துவதில் நோர்த்போர்ட்டின் டிஜிட்டல் மயம் இ-இன்வாய்ஸ் திட்டத்தோடு இணைந்து செயல்பட்டிருப்பது மிகப் பெரிய பலனைத் தந்திருக்கிறது.
இது நிலையான உயர்நெறி தொழில் நடவடிக்கைக்கு முக்கிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன என்று நோர்த்போர்ட் மலேசியா பெர்ஹாட் தலைமை நிதி அதிகாரி அய்னுல் அஸுரல்ஸஹார் கூறினார்.
இ-இன்வாய்ஸின் பலன்களும் தாக்கங்களும்
இ-இன்வாய்ஸ் அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து Northport தன்னுடைய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளையும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் கண்டு வருகிறது. invoice தயாரிப்பில் தவறுகள் குறைந்திருக்கின்றன. நிதி அறிக்கை தயாரிப்பின் வேகத்தை Digital மயம் அதிகரித்திருக்கிறது.
இது வரி விதிகளுக்கு உட்பட்டு சிறந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்கிறது. மெனுவல் வேலைப் பளுவை இந்த Digital மய Invoice நடைமுறையை வெகுவாகக் குறைத்திருக்கிறது.
இதன்வழி வியூகப் பணிகளில் அதீத கவனம் செலுத்துவதற்கு நிதிப்பிரிவைச் சேர்ந்த குழுவினருக்கு விசாலமான வசதிகளை தருகிறது என்று அவர் மேலும் கூறினார். E-invoice அமலாக்கத்திலிருந்து Northport பல்வகையான பலன்களை பெற்று வருகிறது. இது தன்னுடைய பல திட்டங்களுக்கு பெரும் பக்கபலமாக இருக்கிறது. நடைமுறைகளை விரிவுபடுத்தியிருக்கிறது. ஆக்கப்பூர்வமான ரொக்கப் புழக்கத்தில் பெரும் தாக்கத்தைத் தந்திருக்கிறது. ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகள் வெற்றிப் பாதையை நோக்ககி பயணிப்பதை உறுதி செய்திருக்கிறது.
விரைவான, துல்லியமான வரியை மதிப்பிடவும் இந்த E-invoice நடைமுறை உறுதி செய்கிறது. அதேசமயத்தில் மூன்றாம் தரப்பினரின் பொய்ப்பித்த லாட்டங்களில் இருந்து நிறுவனத்தை பாதுகாக்கிறது என்று அய்னுல் தெரிவித்தார்.




















