இரண்டு நாட்கள் பயணமாக உஸ்பெகிஸ்தான் அதிபர் மலேசியா வருகை

கோலாலம்பூர்:

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.

மிர்சியோயேவின் வருகை மலேசியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்று அன்வார் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

தன்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த ஷவ்கத் மிர்சியோயே தாம் அனைவரது சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறிய பிரதமர், 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து மலேசியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும் என்றார்.

கடந்த ஆண்டு மே மாதம் அன்வார் உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

2024 ஆம் ஆண்டில், மத்திய ஆசிய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here