ஜோகூர் பாரு:
பத்து பகாட் அருகே உள்ள கம்போங் பஹாரு, ஸ்ரீ காடிங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணியளவில், குறித்த கிராமத்தைச் சேர்ந்த 88 குடும்பங்களை உள்ளடக்கிய 254 பேர், செகோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) ஸ்ரீ காடிங்கில் உள்ள நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், ஆனால் நேற்று காலை 10 மணிக்கு இந்த துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டபோது 34 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் மட்டுமே தங்கியிருந்தனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை செங்காராங்கின் நீர் மட்டம் 3.37 மீட்டர் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட்டில் 2.30 மீட்டர் பதிவாகி எச்சரிக்கை நிலையில் உள்ளது.
“மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.




















