குவாந்தானில் வீடமைப்பு திட்டப் பகுதியில் இரண்டாம் உலகப் போரின் குண்டு கண்டுபிடிப்பு

குவாந்தான்,

Bukit Goh பகுதியில் அமைந்துள்ள வீடமைப்பு திட்ட பணிக்களத்தில், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 250 கிலோகிராம் எடை கொண்ட விமான குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“வீடமைப்புத்திட்ட பணியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் இந்த குண்டை கண்டுபிடித்தார். அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று குவாந்தான் தொகுதி இடைக்கால போலீஸ் தலைவர் Adli Mat Daud தெரிவித்தார்.

இதனிடையே காவல்துறையின் குண்டு பாதுகாப்பு பிரிவு குழு, ஆபத்தான சூழ்நிலையை மதிப்பீடு செய்தபின், ‘Low Order’ என்ற முறைப்பாட்டில் குண்டை இன்று காலை 10 மணியளவில் பாதுகாப்பாக அழித்தனர் எனவும் இந்த முறை, அந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளுக்கு எந்த அதிர்வும் ஏற்படாமல் இருக்க செய்யப்பட்டது எனவும் Adli Mat Daud தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here