அன்வார்: தலைவர்கள், நேர்மையானவர்களாக, வெளிப்படையானவர்களாக மற்றும் மக்கள் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்:

சண்டக்கானில் (Sandakan), நேற்று, இரவு, 27 ஆண்டுகள் சீர்திருத்தத்தைக் (reforms) குறிக்கும் `கெஅடிலான்’ (Keadilan) கூட்டத்தில் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) உண்மையான தலைமைத்துவம் ஒருமைப்பாடு தெளிவான கொள்கைகள் மற்றும் மக்களின் நலன் மீதான அர்ப்பணிப்பு மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.

தேர்தலின்போது, “ஹீரோக்கள்” (heroes) போல் செயல்படும் ஆனால் அதை வழங்கத் தவறும், தலைவர்களின் பேச்சைக் கேட்டு வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்று அன்வார் எச்சரித்தார்.

சபா மாநிலத்தில், வரவிருக்கும் மாநிலத் தேர்தல் நேர்மையான திறமையான மத்திய அரசாங்கத்துடன் பணியாற்ற கூடிய தலைவர்களைக் கொண்டு வர வேண்டும்.

பான் போர்னியோ நெடுஞ்சாலையில்’ (*Pan Borneo Highway*) ஏற்பட்ட தாமதத்தை மோசமான தலைமைத்துவத்திற்கு ஒரு உதாரணமாகக் காட்டி, மலேசியாவை ஒரு முன்னணி பிராந்தியப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு, மடானி’ (Madani) அரசாங்கக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் தலைவர்களை தேர்ந்தெடுக்குமாறு சபா மக்களை அன்வார் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here