லங்காவியில் பயிற்சி விமானம் அவசரத் தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்!

கோலாலம்பூர்:

புத்ராஜெயாவில் இன்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) வெளியிட்ட அறிக்கையின்படி, லங்காவியின் குவா (Kuah) பகுதிக்கு அருகே ‘டைமண்ட் ஏர்கிராஃப்ட் DA-40’ (Diamond Aircraft DA-40) ரகப் பயிற்சி விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது.

இன்று காலை 9.54 மணியளவில் லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், காலை 10.29 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அந்த விமானத்தில் இருந்த இருவர் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதை CAAM உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), 2016-ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து விதிகளின்படி விரிவான விசாரணையை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here