சுங்கை சிப்புட், ருக்குன் தெதாங்கா தாமான் ஈவுட் / தாமான் பெர்த்தாமா இயக்கத்தின் 2026–2029 தவணைக்கான புதிய நிர்வாகக் குழு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது.தாமான் ஈவுட்டில் அமைந்துள்ள இயக்க பொது மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், புதிய தலைவராக லோகநாதன் வடிவேலு தேர்வு செய்யப்பட்டார்.
அதேவேளையில், துணைத் தலைவராக மதிவாணன் பொறுப்பேற்றார். கௌரவச் செயலாளராக பரமேஸ்வரி, துணைச் செயலாளராக பரமசிவம் , பொருளாளராக ஏச்சலின் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், கணக்காய்வாளர்களாக ஏலன் , கெனாசன் தேர்வு செய்யப்பட்டனர்.கோலகங்சார் மாவட்ட ஒற்றுமைத்துறை இலாகா அதிகாரிகள் ஆர். சோபன் ராஜ் மற்றும் முகமட் ஜமாடிபித்திரி தலைமையில் இந்த புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.
தம்மீது நம்பிக்கை வைத்து தலைவராகத் தேர்ந்தெடுத்த ருக்குன் தெதாங்கா இயக்க உறுப்பினர்களுக்கு லோகநாதன் வடிவேலு நன்றி தெரிவித்தார்.புதிய நிர்வாகம் சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், இயக்கத்திற்காக புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கான நில விண்ணப்பம் முறையாகச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளையில், இப்பகுதியில் முன்பு இரவு நேர பாதுகாப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், தவிர்க்க முடியாத காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறினார். அந்த ரோந்து பணி மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என லோகநாதன் வடிவேலு தெரிவித்தார்.
(எஸ். லிங்கேஸ்வரன்)





















