மத்திய அரசாங்கத்தில் நீடிப்பதா? ஆகஸ்ட் 16 தேசிய மாநாட்டில் DAP சிறப்புத் தீர்மானம்! – அந்தோனி லோக் அறிவிப்பு

கோலாலம்பூர்:

ற்போதைய நாடாளுமன்றக் தவணை முடியும் வரை மத்திய அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, எதிர்வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புத் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் (CEC) கூட்டத்திற்குப் பிறகு, கோலாலம்பூரிலுள்ள DAP தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தியோ, துணைப் பொதுச்செயலாளர் ஹன்னா யோ மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here