மூவார்:
பாகோ சமுக நல விளையாட்டு மன்றம், தாமான் பாகோ ஜெயா இயக்கமும் இனணந்து பாகோ வட்டாரத்தில் உள்ள ஆரம்பபள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் 50 இந்திய மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் , காலணிகள் வழங்கினர்.
இந்த சிறிய உதவிகள் முலம் பெற்றோர்கள் தங்கள் பள்ளிச் செலவுகளை சாமாளிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று அவர்கல் கூறினர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஜோகூர் மாநில ஸ்ரீ முருகன் இயக்கத்தின் தலைவர் பெ.சுப்பரமணியம் தலைமை ஏற்றார்.
‘தமிழ்ப் பள்ளியை காப்போம் ‘என்ற தலைப்பில் வருகை தந்த பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார். உலகளாவிய தமிழ் மொழியின் சிறப்பை பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக பாகோ இந்து சங்கத்தின் ஆலோசகர் ம.கைலாசம் சிறப்பு வருகை தந்து மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளை வழங்கினார்.





















