கெடாவில் இன்னும் 7 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பாட்டிலுள்ளன

அலோர் ஸ்டார்,  நவம்பர் 8 :

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 616 பேர் தங்குவதற்கு ஏழு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் (PPS) இன்னும் செயல்பாட்டிலுள்ளன.

கெடா சிவில் தற்காப்புப் படை (APM) பேரிடர் மேலாண்மைக் குழு செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (PA) முகமட் முவாஸ் முகமட் யூசாஃப் இதுபற்றிக் கூறுகையில், தற்போது ஆறு PPSகளில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் சுக்கா மெனந்தியில் ஒரு PPS இன்னும் செயலில் இருக்கிறது. அப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதுவரை எந்த பாதிக்கப்பட்டவர்களும் அங்கு தங்கவைக்கப்படவில்லை என்றார்.

PPS SK தாருல் ஹிக்மாவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

“சிம்பாங் கோலாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் “கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இதுவரை 85 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகமட் முவாஸ் தொடர்ந்து கூறுகையில், பென்டாங் மாவட்டத்தில் உள்ள இரண்டு PPSகளில், அதாவது PPS தானா மேரா விளையாட்டு மண்டபத்தில் இன்னும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திவான் செந்தரவாசியில் உள்ள PPSஇல் 25 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 81 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here