எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில கபடி போட்டி கைருடின், கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்

ஙெ்ர்டாங், ஜூலை 29-

சீபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மாவட்ட கபடி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் ஙெ்ர்டாங் எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சீங்கை பூலோ பாயா ஜெராஸ் ங்ட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் – விளையாட்டுப்பிரிவு தலைவருமான கைருடின் ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.

ஆண்கள் பிரிவில் கோம்பாக், சிப்பாங், ஷா ஆலம்,  கிள்ளான், ஙெ்லாயாங், சீபாங் ஜெயா, கோலலங்காட், உலுசிலாங்கூர், கோலசிலாங்கூர், காஜாங் ஆகிய மாவட்டங்களைச் ஙே்ர்ந்த 16 குழுக்கள் பங்கேற்றன.

பெண்கள் பிரிவில் உலுசிலாங்கூர், சிப்பாங், ஙெ்லாயாங், பெட்டாலிங், சீபாங் ஜெயா, கோலலங்காட் ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றன.

இந்தியர்களின் பாரம்பரிய போட்டியான கபடி இன்று பல நாடுகளில் விளையாடப்படுகிறது. குறிப்பாக 2018இல் ஆசியப் போட்டியில் ஈரான் தங்கமும் தென்கொரியா வெள்ளியும் வென்றது.

ஆசியப் போட்டியில்  மலேசியாவும் பதக்கம் வெல்ல போராட்டம் நடத்த வேண்டும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் கேட்டுக் கொண்டார். சிலாங்கூர் மாநில இளைஞர் விளையாட்டுப் பிரிவு துணை இயக்குநர் ஜஸ்டின் ராஜ், சிலாங்கூர் கிராமத் தலைவர்கள் இராஜேந்திரன் ராங்ப்பன், தேவன், கண்மணி, மணிவண்ணன், சீசிலா, மலேசிய இந்தியர் குரல் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன்,  பூச்ங்ோங் ஜஙெ்க தலைவர் மோகன் சிங் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here