கோலாலம்பூர் –
பிரதமர் பதவியில் இருந்து துன் டாக்டர் மகாதீர் முகமது ராஜினாமா செய்துள்ள முடிவை ஏற்றுக்கொள்ள மாட்சிமை தங்கிய மாமன்னர் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் ஸுக்கி அலி நேற்று தெரிவித்தார்.
எனினும், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 43 (2) (ஏ) கீழ் புதிய பிரதமரை நியமிக்கும் வரையில் இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரை நியமனம் செய்வதற்கு மாமன்னர் இணக்கம் தெரிவித்திருக்கிறார் என்று அவர் சொன்னார்.
புதிய பிரதமரும் அமைச்சர்களும் நியமனம் செய்யப்படும் வரையில் நாட்டு நிர்வாகத்தை இடைக்காலப் பிரதமர் கவனித்துக் கொள்வார் என்று அந்த அறிக்கையில் அவர் சொன்னார்.