சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

ரியாத், மார்ச் 23-

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

சவுதிஅரேபியாவில் கொரோனாவிற்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.ஊரடங்கு உத்தரவின் கீழ் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காலை 7 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் இது தொடர்பாக அனைத்து உள்ளுர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தடை இல்லாத நேரத்தில் தீவிர தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

ஏனெனில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான அபாயத்திற்கு தங்களையும் தங்கள் நாட்டையும் ஆளாகக்கூடாது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here