எத்தனை மலேசியர்கள் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கிறார்கள் – என்னிடம் தகவல் இல்லை – டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்

புத்ராஜெயா:
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப\ விஸ்மா புத்ராவும் குடிநுழைவு துறையும் வழிகாட்டுதல்களை உருவாக்கும் என்று மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
பல மலேசியர்கள் தாங்கள் தற்போது இருக்கும் நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் விமானங்கள் வந்து புறப்படுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இப்போது வெளிநாடுகளில் உள்ள சில மலேசியர்கள் திரும்பி வர முடியாது. இந்த சிக்கலை தீர்க்க ஒரு நிலையான இயக்க நடைமுறையை கொண்டு வருமாறு நாங்கள் வெளியுறவு அமைச்சகம் மற்றும் குடிநுழைவு துறையை கேட்டுக் கொண்டோம் என்று அவர் இன்று தெரிவித்தார்.
எத்தனை மலேசியர்கள் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது குறித்து தன்னிடம் இல்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார், விஸ்மா புத்ரா இதனை தெரியப்படுத்தப்படும் என்றும் வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் கூறினார்.
இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் மலேசிய மாணவர்கள் வீடு திரும்ப விரும்புகிறார்கள்.
வெளியுறவு அமைச்சகம் இன்றுவரை, இந்தியா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மலேசியர்களை திருப்பி அழைத்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here