அரண்மனையில் 7 பணியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு!

கோலாலம்பூர் –

இஸ்தானா நெகாரா அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்களுள் குறைந்தது ஏழு பேருக்கு கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் தம்பதியர் சுயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இஸ்தானா நெகாராவில் 7 பணியாளர்களுக்கு இந்தத் தொற்று கண்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக அரண்மனையின் நிர்வாக அதிகாரி டத்தோ அமாட் ஃபாடில் தெரிவித்தார்.

அந்த 7 பேரும் இப்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது.

அரண்மனையிலும் வைரஸ் தொற்று பரவியதை அடுத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, மகாராணியார் துங்கு அஸிஸா ஆகியோர் சுயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அவர்கள் இருவருக்கும் இந்தத் தொற்று ஏற்படவில்லை என்றும் அமாட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here