வாஷிங்டன், மார்ச் 27-
கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்களை சீன அரசாங்கம் மூடி மறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல விவகாரங்களை சீனா மூடி மறைக்கிறது. இது விவேகமான செயலாகப் படவில்லை.
சீனா தொடர்ந்து மூடு மந்திரம் போல செயல்பட்டு வருவது சரியல்ல.
முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் சீனாவிலிருந்து வெளிப்பட்டு வருவது சரியல்ல.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக செயல்பட வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.