வேலையிழப்பில் வாழ்வாதரம் பாதிப்பு சமூக பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தின் வழி உதவி

அமைச்சர் டத்தோ சரவணன்

கோலாலம்பூர், மார்ச் 27-

கொரோனா 19 பாதித்திருக்கும் இக்காலக் கட்டத்தில் பல நிறுவனங்கள் முன்னேற்றப்பாடாக தொழில் முடக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றன.

பல தொழிலாளர்கள் வேலைகளை இழந்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வேலை வாய்ப்பைத் தக்கவைக்கும் திட்டத்தை சொக்சோ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செயல் படுத்த அறிவித்திருக்கிறது என்று மனித வளத்துறை என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தற்காலிக நிதிதவி, வேலைவாய்ப்புச் சேவைகள் வழி இந்த உதவிகள் வழங்கப்படும்.

விமான போக்குவரத்துத் துறைகளில் பாதிப்படைந்த 40 ஆயிரம் தொழிலாளர்கள், சுற்றுலாத்துறை, ஹோட்டல்துறை ஆகிவற்றில் இழப்பை எதிர்நோக்கியவர்கள் இத்திட்டத்தினால் பயனடயலாம்.

தொழிலாளர்களின் ஊதிய குறைப்பு, வருடாந்திர விடுமுறைக்குறைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்யவேண்டாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம் ஆகியவற்றில் முதலாளிகள் சிறந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். அதே வேளை மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைப் பின் பற்ற வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் டத்தோ சரவணன் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here