மருத்துவ ஆய்வுக் கூட்டணியில் சுகாதாரதுறை தலைமை இயக்குநர்

கோலாலம்பூர், ஏப்ரல் 3-

உலக நாடுகளை மிரட்டிவரும் கொரோனா 19 தொற்று ஒழிப்பு சுகாதாரக் கூட்டணியில் மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா இடம் பெற்றிருக்கிறார்.

உலக நாடுகளிலிருந்து 70 மேற்பட்ட நிறுவனங்கள் இதற்கு நிதிவளம் தருகின்றன. இவர்கள் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருக்கின்றனர். இக்குழுவினர் கொரோனா 19 க்கான மருந்து கண்டுபிடிக்கும் கொள்கையில் அதி தீவரமாக இருக்கின்றனர்.

கொரோனா 19 சோதனைகள் 600 க்கும் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் மிகச் சிலரே திட்டமிட்டபடி கண்டறிந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கான அனைத்து தரவுகளும் ஒருங்கிணைக்கப்புடன் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இத்தரவுகள் பகிரப்படலாம் எனவும் உலக சுகாதார இயக்கம் அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here