அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மக்களை எச்சரிக்கிறது போலீஸ்

கோலாலம்பூர்: மோசடி செய்பவர்கள் அரசாங்கத்தின் தகவல் தொகுப்பைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று காவல்துறை ஆணையர்  டத்தோஶ்ரீ மொஹமட் ஜகாரியா அகமது (படம்) கூறுகிறார்.

புக்கிட் அமான் வணிக குற்ற புலனாய்வுத் துறை (சி.சி.ஐ.டி.) இயக்குனர், மோசடி செய்பவர்கள் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசாங்கத்தின் “முகவர்கள்” என்று கூறி கேட்கின்றனர்.

“அவர்களின்   குறுஞ்செய்திகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கான  உதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், அதனை பெறுவதற்கு  தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் தேவை என்றும் கூறுகின்றன. இந்த மோசடி செய்பவர்களால் ஏமாற வேண்டாம், இந்த விஷயத்தில் முறையான அதிகாரிகளை மட்டுமே நம்புங்கள்” என்று அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 4) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், மோசடி செய்பவர்களின் இத்தகைய முயற்சிகள் குறித்து போலீசாருக்கு தெரியும் என்று  மொஹட் ஜகாரியா கூறினார்.

“பொதுமக்கள் ஒருபோதும் தங்கள் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை வெளியிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உதவிகளை மக்களுக்கு விநியோகிக்க உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) மட்டுமே அதிகாரம் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

சிசிஐடியின் குற்ற நடவடிக்கை செயல் பிரிவு மோசடி செய்திகளை அனுப்பியவர்களைக் கண்டுபிடிக்கும். இதேபோன்ற விஷயத்தில், இந்த கடினமான காலங்களில் பொதுமக்கள் தங்கள் ஊழியர் சேமிப்பு நிதியத்திலிருந்து (இபிஎஃப்) என்று  பணத்தை மீட்டுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்தபோது மக்களை ஏமாற்ற முயற்சிகள் நடந்துள்ளன என்று கம் மொஹட் ஜகாரியா கூறினார்.

மீண்டும், நியமிக்கப்பட்ட நிறுவனத்துடன் மட்டுமே கையாளுங்கள், மூன்றாம் தரப்பினருடன் அல்ல. மக்கள்  எங்கள் ஆலோசனையை கவனித்து, இந்த மோசடி செய்பவர்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பர் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

இபிஎப் உள்ளிட்ட அரசாங்கம் வழங்கும் நிதியுதவி குறித்து விவரம் வேண்டுவோர்  சி.சி.ஐ.டி இன் தொலைபேடி எண்ணான 013-211 1222 (வாட்ஸ்அப்)  அல்லது sebenarnya.my என்ற வலை தளத்தை பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here