கோலாலம்பூர், ஏப்.5-
மலேசிய சந்தாதாரர்களின் இ.பி.எப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரிய இரண்டாவது கண்க்கிலிருந்து பணத்தைக் கொள்ளையிட புதுக் கும்பல் தயாராகி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் பிரிவின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ ஸக்காரியா முகமட் அமாட் மேற்கண்ட வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
கொரோனா அவசர காலத்தை முன்னிட்டு இ.பி.எப்பின் இரண்டாவது கணக்கில் உள்ள பணத்தை சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என பிரதமர் டான்ஸ்ரீ முகிதின் யாசின் அறிவித்திருந்தார்.
அறிவிப்புக்குப் பின்னர் ஒரு கும்பல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அணுகத் தொடங்கியிருக்கிறது.
நம்பகமான சேவையை வழங்குவதாக மக்களை நம்ப வைக்கும் வகையில் இணையத்தளம் ஒன்றையும் அக்கும்பல் தயார்படுத்தியிருக்கிறது என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஸக்காரியா கேட்டுக் கொண்டுள்ளார்.