கைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர்

மாஸ்க் தைக்கும் பணியில் இந்திரன்ஸ்

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முக கவசம் தயாரித்து வழங்கி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து மாநில அரசின் விருது பெற்ற நடிகர் இந்திரன்ஸ் என்பவர் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நம் கையே நமக்கு உதவி என்பது போல நாமே நமக்கு தேவையான முக கவசங்களை எளிதில் தயாரிக்க முடியும். அதற்கான பயிற்சி முறைகளை சிறை கைதிகளுக்கும் சொல்லி கொடுத்து வருகிறேன் என்றார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். இவர் நடிக்க வரும் முன்பு டெய்லராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here