ஸ்ரீ வராஹவதாரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஸ்ரீ பூமாதேவியை காக்க எடுக்கப்பட்டதாகும். முன்னொரு சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் ஸ்ரீ பூமாதேவியை அபஹரிக்க வந்ததால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் தஞ்சம்புகுந்தாள் ஸ்ரீ பூமாதேவி. ஹிரண்யாக்ஷனை வதம் செய்து ஸ்ரீ பூமாதேவியை காத்தார்.
கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி மற்றும் பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் ஆகியோர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை வழிபடுவது சிறந்தது. வெல்லம், கோரைகிழங்கு ஆகியவை இவருக்கு பிரசாதம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் உடன் இருந்து ரக்ஷித்து வருகிறார்.
ஓம் தநுர்த்தராய வித்மஹே
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்