பெர்லிஸ் மாகாணத்தில் ரமலான் உணவுச்சந்தை இல்லை

கங்கர், ஏப் 15-

இந்த ஆண்டு ரமலான் சந்தை நடத்தக்கூடாது என்றே பலரின் கருத்தாக இருக்கிறது. நோன்பு மாதத்தில் மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு ஆணையின்போது மாநிலத்தில் உள்ள உணவு தயாரிப்பாளர்கள் தங்கள் வணிகத்தை வீட்டிலிருந்தும் சாலையோரத்தில் வைத்தும் செயல்பட பெர்லிஸ் அரசு அனுமதிருக்கிறது.

இதனக் கடைப்பிடிக்கும்போது வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், இது பொட்டலம் அல்லது எடுத்துச் செல்லும் உணவாக விற்கப்பட வேண்டும் என்று பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்லான் மான் கூறினார்.

சாலையோரத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் உணவு வகைகள் எடுத்துசெல்ல மட்டுமே. அங்கு அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை . சாப்பிடுவதற்கு மேசைகள் , நாற்காலிகள் போடவும் அனுமதிக்கப்படவில்லை, மக்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகவே விதிகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

கொரோனா தொற்று நீக்கத்திற்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் முன்னணியாளர்களின் சேவைக்காக ஒரு மில்லியன் வெள்ளி தொகையை காசோலையாக டத்தோஶ்ரீ அஸ்லான் மான் வழங்கியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here