வாஷிங்டன்,ஏப்ரல் 17-
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றால் 2,152,000 பேர் பாதிக்கபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 145,000 உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 667,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர்.
கடந்த வாரம் 52 லட்சம் அமெரிக்கர்கள் வேலைக்காக விண்ணப்பித்து உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது. தற்போது அது 2.2 கோடியாக அதிகரித்து உள்ளது. இது அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பை காட்டுகிறது. கொரோனா பாதிப்பால் ஏழு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழப்பை சந்திக்கிறார்.