பசியில் வாடுபவர்களுக்கு உதவிய நல்லுள்ளங்கள்

கோவிட்-19 தாக்கம் அனைவருக்கும் வேதனையையும் சோதனையையும் உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால் வேதனை சோதனையை விட கொடுமையானது பசி.

அந்த வகையில் பசியில் வாடும் வசதியற்றோருக்கு  மஇகா  பெக்கான் சுங்கைபூலோ கிளையும் ஆர்டிஎஸ் இறைச்சி கடையும் இணைந்து 25 குடும்பங்களுக்கு அத்திவாசிய உணவுப் பொருட்களுடன் 50 வெள்ளி ரொக்கப் பணமும் கிளையின் தலைவர் எம்.ரவி தலைமையில் வழங்கப்பட்டது.

நாம் நன்றாக இருக்கும்போது நம்மை சுற்றியிருப்பவர்களும் உணவு இல்லாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்த உதவியை வழங்கியதாகக் கூறினார்.

இந்த உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் தொகுதித் தலைவர் செளந்தராஜன், மகளிர்பிரிவுத் தலைவு உஷா நந்தினி ஆகியோர் வருகை தந்து பொருட்களை எடுத்து வழங்கினர். போல் நம்மை சுற்றியுள்ளவர்கள் பசியோடு  இருக்கக்கூடாது என்று மஇகா தேசியத்தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்ததை ரவி மேற்காட்டி  பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here