மாணவர்கள் மத்தியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களில் ஆர்வம் குறைவதை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
STEM மீதான ஆர்வம் சிறு வயதிலேயே தொடங்கப்படாவிட்டால், மாணவர்களின் கல்வி முறை பாதிக்கப்படும் என கடந்த மே 11ஆம் தேதி ஒரு நேரடி தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறினார்.
STEM ஐ ஊக்குவிப்பதற்கும் மாணவர்களிடையே புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் கல்வி அமைச்சுகளின் கூட்டு முயற்சிகளை செயல்படுத்த 2020 பட்ஜெட்டில் 11லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் நேர்காணலின் போது கூறினார்.