ரோஜா எந்த நிறத்தில் இருந்தாலும் அழகானது தான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை எமக்குப் பெற்றுத்தரும்.
இளஞ்சிவப்பு ரோஜா :
இளஞ்சிவப்பு ரோஜா கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு நல்லது, கேட்டது நமக்கு புலனாகும். நிறைகள் வளரும், குறைகள் அகன்றுவிடும்.
வெள்ளை ரோஜா :
வேலை தேடுவோருக்கு நேர்முக தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சம் இருப்பவருக்கு. வேலை சரியில்லை என்ற கிரக பயம். வறுமை பயம், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்ற பயம். எதிலும் அச்சம், எப்பொதும் அச்சம். மீள வழியே இல்லையா என்று வேதனைபடுபவர்கள், வெள்ளை ரோஜாக்களால் இறைவனை வழிபட அச்சம் பறந்தோடும் , தைரியம் கொடிகட்டும், பகைவரும் நண்பராவர்.
வெள்ளை ரோஜாவின் தன்மை அப்படி. அது இனிமையானது தன்னம்பிக்கை அழிப்பது.
மஞ்சள் ரோஜா :
தொலைந்து போன நிம்மதியை திரும்ப பெற வேண்டுமா? ரோஜாவை இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்.
பொறாமை, பகைமை, காரணமாக மனதில் ஏற்படும் நெருடலில் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போய்விடும். குரோதம் தொலைந்து கணவன், மனைவி குதூகலத்துடன் வாழ்ந்திட ரோஜா கொண்டு இறைவனை வணங்க வேண்டும்.
சிவப்பு ரோஜா :
இந்துக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை உள்ளவர்கள், இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம், வாழ்வின் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதராவோம், நமது வாழ்வும் புது வாழ்க்கை ஆகிவிடும். கர்ம வினைகளில் நம்பிக்கை உடையவர்கள். சிவப்பு ரோஜா கொண்டு இறைவனை அர்ச்சிக்க, கர்மவினைகள் நீங்கி பேரானந்தம் வந்தடையும்.