யுவனுடன் திருமணம் நடந்தது எப்படி? இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜஃப்ரூன் நிசார்

தமிழ் சினிமாவில் முன்னணி இசுயமைப்பாளராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியராக மதம் மாறினார். அதன் பிறகு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் ஜஃப்ரூன் நிசார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் நடந்தது எப்படி என ஜஃப்ரூன் நிசார் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் யுவன் தான் ஏன் இஸ்லாத்துக்கு மாறினேன் என விளக்கம் அளித்திருந்த நிலையில் தான் அவரது மனைவி இதை பதிவிட்டுள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் யுவன் மதம் மாறினார் என சிலர் விமர்சிப்பதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

ஜூலை 201இல் ரமலான் மாதத்தில் யுவன் தனக்கு அனுப்பிய முதல் மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள அவர். அவர் ஏன் இஸ்லாத்துக்கு மாறினார் என தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். அது பற்றி கேட்டதற்கு அது மிகவும் தனிப்பட்ட விஷயம் என அவர் கூறினார். அப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்டது எனக்கு சங்கடமாக இருந்தது. அப்போது நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here