கதாநாயகர்கள் வரிசையில் இசையமைப்பாளர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பது புதுச்செய்தியல்ல.
இசையமப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள் என்றெல்லாம் வரிசைப்பிடித்து நிற்கிறார்கள்.
இசையமைப்பாளர்களுக்கு இசை மட்டுமே தெரியும் என்பதெல்லாம் பழையகதை முறியடிக்கப்பட்டு நடிகர்களாக மாறியிருக்கின்றனர். இப்போது நடகர்களைத்தாண்டி நாயகர்களாகவும் புதிய வார்ப்புக்கு மாறியிருக்கும் வரிசையில் இசைத்துளி ஒன்றின் பெயர் மெல்லிசையாய் இசை சேர்த்துக்கொண்டிருக்கிறது.
அது பாடலாக மாறும் என்பது வெகுதூரத்தில் இல்லை என்பதுபோல் ஒரு பதிவை முன் வத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அந்த்தபாடல் அனிருத் என்று தொடங்குமென்கிறார் சிவகார்த்திகேயன். பல தடவை அனிருத் பெயர் அடிப்பட்டிருக்கிறது. கதாநாயகனாக நடிப்பார் என்ரும் பேசப்பட்டிருக்கிறது. இதை மெய்யாக்கும் காலத்தை உருவாக்கக் காத்திருப்பதாக சிவகாத்திகேயன் மிகுந்த லவ்வோடு கூறியிருக்கிறார்.
நடிக்க ஆர்வம், இல்லை என்கிறார் அனிருத். அவரின் வார்த்தையிலேயே முக்கால் பதில் இருக்கிறது.
பச்சை விளக்கு வெளிச்சம் காட்டினால் அனிருத் நாயகன், சிவக்கார்த்திகேயன் தயாரிப்பாம். நெல்சன் திலீப்குமார் இயக்குவாராம். அனிருத் உடம்புக்கு எந்த ஜோடி பொருந்தும் யாராக இருக்கும் என்ற கற்பனைக்கு ரசிகர்கள் தயாராகிவிட்டனராம்!