இந்த ஆட்சி தொடர வாய்ப்பளியுங்கள்

இந்த தவணை முடியும் வரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்குதல்கள் கொடுத்து வந்தாலும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றார் அவர்.

கோவிட் 19 தாக்கத்தினால் கூட நாட்டு மக்களுக்கு சிறப்பான முறையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் உதவிகளை வழங்கி வந்துள்ளது. ஆகவே, நாடாளுமன்ற தவணைக்காலம் முடியும் வரை இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஆதரவு தரும்படி அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here