என் ஆசான், என் தந்தை

என் அப்பா, திரு.மா. பாலகிருஷ்ணன் என்னை நெஞ்சிலும் தோளிலும் சுமந்தவர். தாய் 10 மாதம் என்னை தன் கருவில் சுமந்தால். ஆனால் என் தந்தை என்னை பிறந்தது முதல் வளர்ந்தது வரை என்னை சுமந்தவர்.

எனக்கு நடப்பதற்கு கற்று கொடுத்து ஆசான் ஆவார். நான் உரங்கும் போது, ”ஓர் தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு” பாட்டு பாடி தூங்க வைப்பார். நான் சிறு வயது முதல் அவர் கடைசி காலம் வரை அவரின் அன்பும் அரவனைபிலும் அப்பா மீது மிக பிரியம் கொண்டவலாய் இருந்தேன்.

என் பள்ளி பருவத்தில் எனக்கு ஒரு  தோழனாய், ஆசிரியராய் ஒரு வழகாட்டியாய் இருந்தார். கோழி தன் குஞ்சை எப்படி அடைகாத்து வருமோ, அப்படி வளர்த்தார். என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார். நான் வளர்ந்து, பெரியவள் ஆனதும் இன்னும் எனக்கு தைரியம் ஊட்டி, உலகம் எப்படி என்று எனக்கு கற்றுகொடுத்தார். நல் பண்புகளையும் மரியாதையும் கற்று கொடுத்தார் என் ஆசான், என் தந்தை.

ஒரு முறை நான் என் பள்ளி பருவத்தில் எனது நண்பர்களுடன் அப்பாவுக்கு தெரியாமல் வெளியில் சென்றுவிட்டேன். அதை கண்டு பிடித்த அவர் என்னை கூப்பிட்டு மிகவும் அழகான முறையில் கண்டித்தார். நான் படித்து, வேலையில் அமரும் வரை ஒரு பாதுகாவலனை போல் என்னுடன் இருப்பார். எனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தார். ஒரு பெண் குழந்தை தன் தந்தையிடம் மட்டும் தான் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள்.

எனக்கு அன்றாடம் அதிகம் வரும் ஒரே தொலைபேசி அழைப்பு என் அப்பாவிடம் இருந்துதான். தினமும் இருமுறை அழைத்து விடுவார். என் அப்பாவும் நானும் சாப்பாட்டு பிரியர்கள்.

தினமும் எனக்கு அலுவலகம் முடிந்து, அவர் காரில் ஏற்றிக்கொள்வார். என்னை கார் ஓட்ட சொல்வார். புதிய புதிய சீன, மேல்நாட்டு உணவகத்திற்கு அழைத்து செல்வார். என் அப்பா அதிகம் ஞாபகம் சக்தி கொண்டவர். அவரிடம் பொய் சொல்லி தப்பிக்க முடியாது. எனக்கு பிடிக்காத விஷயங்களை உடனே நிறுத்திவிடுவார்.

எனக்காக நிறைய கொள்கைகளை தியாகம் செய்தவர். எனக்கு பிராணிகள் என்றால் அலாதி பிரியம். எனக்காக நான் கொண்டு வரும் பூனை குட்டிகளையும் வீட்டில் சேர்த்துகொண்டு என்னுடன் சேர்ந்து குட்டிகளை கவனித்துக் கொள்வார்.

நிறைய பொது அறிவுகளையும் அரசியல் சம்பந்தபட்ட விஷயங்களை அதிகம் பேசுவார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி தத்துவ பாடல்களை விரும்பி கேட்பார். அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

இப்படி சொல்லி கொண்டே போகலாம். அப்பா இவ்வுலகில் இல்லை என்றால், தனியாக ஒரு பெண்ணாக சவால்களை எப்படி சந்திப்பது என்று கற்று கொடுத்தவர் என் தந்தை. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உங்கள் மகளாகவே பிறக்க வேண்டும்.

இப்பூவலகில் அவர் இல்லை என்றாலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்னுடன் என் நினைவுகளில் என் அப்பா…

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என் தந்தையே…

என்றென்றும் உங்கள் மகள்,

பிரியாபாலகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here